OUR CLIENTS
வேலூரில் காணும் பொங்கல் கொண்டாட்டம்!
வேலூரில் காணும் பொங்கல் கொண்டாட்டம்! Posted on 18-Jan-2019 வேலூரில் காணும் பொங்கல் கொண்டாட்டம்!

வேலூர், ஜன.18-

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் விமரிசையாக கொண்டாடினர்.

உழவர் திருநாள் மற்றும் காணும் பொங்கலை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள்  வரையில் புத்தாடை அணிந்து கொண்டாடினர். அத்துடன் சுற்றுலா பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்று மகிழ்ந்தனர். வேலூர் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் நேற்று வருகை தந்தனர். அங்குள்ள பூங்கா, படகு சவாரி மையம் ஆகிய இடங்களில் வலம் வந்தவாறு இருந்தனர். மக்கள் கூட்டம் வேலூர் கோட்டையில் அலை மோதியது. ஆயிரத்து ஐநூறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Label