OUR CLIENTS
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒகுஹாராவை வீழ்த்தி சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம்
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒகுஹாராவை வீழ்த்தி சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம் Posted on 18-Jan-2019 மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒகுஹாராவை வீழ்த்தி சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் காலிறுதியில் ஒகுஹாராவை வீழ்த்தி சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேறினார்.

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான காலிறுதி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால், முன்னாள் உலகச் சாம்பியனான ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.
இதில் சாய்னா 21-18, 23-21 என நேர்செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் மரின் கரோலினாவை எதிர்கொள்கிறார். சாய்னா ஐந்து முறை மரினை தோற்கடித்துள்ளார். ஆனால் கடைசி 10 ஆட்டங்களில் பெரும்பாலான போட்டிகளில் மரின்தான் வெற்றி பெற்றுள்ளார்.

Label