OUR CLIENTS
ஸ்டாலின் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும்: அமைச்சர் சி.வி.சண்முகம்
ஸ்டாலின் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும்: அமைச்சர் சி.வி.சண்முகம் Posted on 21-Jan-2019 ஸ்டாலின் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும்: அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம், ஜன. 21-

திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும் என சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் மக்களுக்கு சிறப்பான திட்டங்களை செயல் படுத்தி வரும் அதிமுக ஆட்சியை கலைக்கவே திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி செய்துவருகிறார். அது ஒருபோதும் நடக்காது என்றார். 
மேலும், ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும் என்றார் அமைச்சர் சி.வி. சண்முகம்.

Label