OUR CLIENTS
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: அக்டோபர் 25-க்கு ஒத்திவைப்பு
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: அக்டோபர் 25-க்கு ஒத்திவைப்பு Posted on 30-Aug-2016 விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: அக்டோபர் 25-க்கு ஒத்திவைப்பு

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கின் விசாரணை, அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


திருவண்ணாமலை காந்தி சிலை அருகே 2012ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 28ஆம் தேதி விஜயகாந்த் பிறந்த நாள் விழா, ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பேசிய விஜயகாந்த், தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் அவதூறாக பேசினாராம்.


இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.


விஜயகாந்த் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், தமிழகத்தின் 14 மாவட்டங்களில் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு விஜயகாந்த் ஆஜராவதில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

இதேபோல, அனைத்து அவதூறு வழக்குகளையும் விசாரிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி தன்ராஜ் உத்தரவிட்டார்.

Label