OUR CLIENTS
ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்
ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர் Posted on 21-Jan-2019 ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜன.21) ஆஜராகியுள்ளார். 
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் என 130-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அதை உறுதிபடுத்தும் விதமாக,  கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக உள்துறைக்கும், கர்நாடக சிறைத் துறைக்கும் விசாரணை ஆணையம் அண்மையில் கடிதம் எழுதி இருந்தது. 
இந்நிலையில், 4-வது முறையாக சம்மன் அனுப்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு  அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார். ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாத நிலையில் தற்போது விஜயபாஸ்கர் ஆஜராகி உள்ளார்.
அவரிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், சிகிச்சை தொடர்பாக வெளியான மருத்துவ அறிக்கைகள் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Label