OUR CLIENTS
கொல்கத்தாவில் பிரதமர் வேட்பாளராக ராகுலை, ஸ்டாலின் ஏன் முன்மொழியவில்லை? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
கொல்கத்தாவில் பிரதமர் வேட்பாளராக ராகுலை, ஸ்டாலின் ஏன் முன்மொழியவில்லை? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி Posted on 21-Jan-2019 கொல்கத்தாவில் பிரதமர் வேட்பாளராக ராகுலை, ஸ்டாலின் ஏன் முன்மொழியவில்லை? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

சென்னை, ஜன. 21- 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற எதிரிக்கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை ஏன் பிரதமர் வேட்பாளராக, திமுக தலைவர் ஸ்டாலின்  முன்மொழியவில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

 சென்னையில் நடந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின் போது நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அழைப்பின் பேரில் கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்டமான மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், ராகுல் காந்தி குறித்து பேசவில்லை. ராகுல் காந்தியின் பெயரை ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை. ஸ்டாலின் ஏன் ராகுல் காந்தியின் பெயரை முன்மொழியவில்லை என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பினர். 
இதற்கு, சென்னையில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலித்தோம். ஒவ்வொரு மாநிலத்திலும் சூழல் வேறுபடுகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் பிரதமரை தேர்வு செய்யலாம் என மேற்கு வங்கத்தில் வேறுமாதிரி எண்ணுகிறார்கள். அதனால்தான் நான் மேற்கு வங்கத்தில் இது குறித்து பேசவில்லை, இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், திமுக சந்தர்ப்பவாத அரசியலை செய்து வருகிறது. கொல்கத்தாவில் பிரதமர் வேட்பாளராக ராகுலை, ஸ்டாலின் ஏன் முன்மொழியவில்லை?, கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுக நிர்வாகிகள் ஜாமின் கொடுத்தது ஏன்? என கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயகுமார், மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன. மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது பற்றி அதிமுக அறிவிக்க வேண்டிய நேரத்தில் அறிவிக்கும் என்றார் ஜெயகுமார். 

Label