OUR CLIENTS
வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும்: ஐஎம்எஃப் கணிப்பு
வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும்: ஐஎம்எஃப் கணிப்பு Posted on 22-Jan-2019 வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும்: ஐஎம்எஃப் கணிப்பு

சர்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.
2019-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாகவும், 2020-ஆம் ஆண்டில் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த தனது அறிக்கையை ஐஎம்எஃப் அமைப்பு வாஷிங்டனில் திங்கள்கிழமை வெளியிட்டது. இதில் சர்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா நீடிக்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை இப்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது, இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இந்தியாவின் பணவீக்கமும் தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் உள்ளிட்ட காரணங்களால் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் சிறிது சுணக்கம் ஏற்படும். சீன இறக்குமதிப் பொருள்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்து வருவது நிச்சயமாக சீன பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இது ஒட்டுமொத்தமாக ஆசிய கண்டத்தின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆசிய பொருளாதார வளர்ச்சி 2018-ஆம் ஆண்டு 6.5 சதவீதமாக இருந்தது. இது 2019-ஆம் ஆண்டில் 6.3 சதவீதமாகக் குறையும். ஆனால் 2020-ஆம் ஆண்டு சற்று மேம்பட்டு 6.4 சதவீதமாக உயரும்.
கடந்த 2017-ஆம் ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருந்தது. அப்போது இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. 2018-ஆம் ஆண்டு சீனாவின் வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்தது. இந்த சரிவு 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளிலும் தொடரும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும், பிரான்ஸும் பிரிட்டனை பின்னுக்குத் தள்ள வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இப்போது 5-ஆவது இடத்தில் உள்ள பிரிட்டன் ஏழாவது இடத்துக்கு பின்தங்கும் என்றும் ஐஎம்எஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label