OUR CLIENTS
கருவூல கணக்குத் துறையில் மென்பொருள் பயன்பாடு!
கருவூல கணக்குத் துறையில் மென்பொருள் பயன்பாடு! Posted on 22-Jan-2019 கருவூல கணக்குத் துறையில்  மென்பொருள் பயன்பாடு!

வேலூர், ஜன.22-

வேலூர் மாவட்டம் கருவூல கணக்குத் துறையின் மூலம் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மென்பொருள் பயன்பாட்டினை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன்
குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் கருவூல கணக்குத் துறையின் மூலம் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மென்பொருள் பயன்பாடு 10.01.2019 அன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரால் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக 10.01.2019 முதல் 14 மாவட்டங்கள் மற்றும் 4 சம்பள கணக்கு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக 21.01.2019 அன்று 17 மாவட்டங்கள் மற்றும் 5 சம்பள கணக்கு அலுவல கங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 21.01.2019 அன்று வேலூர் மாவட்ட கருவூலத்தில் மென்பொருள் பயன்பாட்டினை வேலூர் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் குத்துவிளக்கு ஏற்றி திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பணம் பெற்று வரும் அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மென்பொருள் பயன்பாட்டுக் குறியீடு மற்றும் கடவுச்சொல் வழங்கினார்.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் பராமரிக்கும் பணி, பட்டியல் தயாரிப்பு மற்றும் ஒப்படைக்கும் பணி உள்ளிட்டவை எளிமையான முறையிலும் காலவிரயத்தை தவிர்க்கும் வகையிலும், இணையதளம் மூலம் செயல்படுத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிழ்ச்சியில் சார் ஆட்சியர் மெகராஜ், கருவூலக் கணக்குத் துறையின் வேலூர் மண்டல இணை இயக்குநர் ச.புவனேஸ்வரி, கருவூல அலுவலர் சு.ரா.புஷ்பா, கருவூல பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Label