OUR CLIENTS
மேக்கேதாட்டு விவகாரம்: தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதமன்றம் உத்தரவு
மேக்கேதாட்டு விவகாரம்: தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதமன்றம் உத்தரவு Posted on 22-Jan-2019 மேக்கேதாட்டு விவகாரம்: தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதமன்றம் உத்தரவு

புதுதில்லி, ஜன.22-

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளித்துள்ள அனுமதிக்குத் தடை கோரி தமிழக அரசும் புதுச்சேரி அரசும் கடந்த ஆண்டு இறுதியில் மனுக்களைத் தாக்கல் செய்தன. மேலும், மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடுத்தது.
இந்த மனுக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 12-இல் விசாரணைக்கு வந்த போது, மேக்காதாட்டு விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக தமிழக அரசின் மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கர்நாடகம் அரசு ஜனவரி 4-இல் தாக்கல் செய்த பதில் மனுவில், "தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தது.
இதனிடையே, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 12-ஆம் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில், "கர்நாடக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க நிபந்தனையின் பேரில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேக்கேதாட்டு அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்தின் திட்ட ஆய்வு நிறுவனத்தின் தலைமைப் பொறியாளருக்கு கர்நாடக நீர்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கடந்த 18-ஆம் தேதி அளித்துள்ளார். மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் திங்கள்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இச்சூழலில் மேக்காதாட்டு விவகாரம் தொடர்பான மனுக்கள் இன்று செவ்வாய்க்கிழமை (22) விசாரணைக்கு வந்தது. 
விசாரணையில், மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளிக்க தமிழக அரசு 4 வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசும் 2 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். 

Label