OUR CLIENTS
ரூ 3.42 லட்சம் கோடிக்கு முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம்- உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் பழனிசாமி பேச்சு
ரூ 3.42 லட்சம் கோடிக்கு முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம்- உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் பழனிசாமி பேச்சு Posted on 24-Jan-2019 ரூ 3.42 லட்சம் கோடிக்கு முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம்- உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை

சென்னை - நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் இறுதி நாளில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார். அப்போது இதுவரை 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்கள் மூலம் ரூ. 3.42 லட்சம் கோடிக்கு கையெழுத்தாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டின் இறுதி நாளான இன்று, குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் வெளிநாட்டு தொழில் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.

இரண்டாவது நாளாக இன்று சென்னை - நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

காலை 10 மணிக்கு தொடங்கிய மாநாட்டில் முதல் நாளில் பங்கேற்ற பல்வேறு நாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் தாங்கள் முதலீடு செய்ய விரும்பும் துறைகளுக்கான கருத்தரங்குகளில் பங்கேற்றனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை முதலீட்டு வாய்ப்புகள் குறித்து நடந்த கருத்தரங்கில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாய்ப்புகள், உணவுத்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

மின்சாதனங்கள் உற்பத்தியில் தமிழகத்தை ஒரு முனையமாக்குவது, ஜவுளித்துறை முதலீட்டுக்கான வாய்ப்புகள், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கும் நடைபெற்றன. இந்த கருத்தரங்குகளில் பிரபல தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் பிரிவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கில் பிரிகேட், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று 2-வது நாளில் 6 நாட்டு தூதர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில், தமிழக அரசுடன் 90-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அவற்றுள் சில:

* அதானி குழுமத்துடன் ரூ.10,000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது

* சிபிசிஎல் நிறுவனத்துடன் ரூ. 27,400 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

* என்.எல்.சி.நிறுவனத்துடன் ரூ. 23,000  கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது

* ஐசெர் நிறுவனத்துடன் ரூ. 1,500 கோடி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது

* எம்ஆர்எஃப் நிறுவனத்துடன்  ரூ.3,100 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது

* பிஎஸ்ஏ நிறுவனத்துடன் ரூ.1,250 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது

* சாய் பல்கலைக்கழகத்துடன் ரூ. 580 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது

*அலைன்ஸ் நிறுவனத்துடன் ரூ.9,488 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது

* எம்.எஸ்.எம்.இ என்ற 12,000 சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் ரூ.30,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது

உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவில் முதலமைச்சர் பழனிசாமி பேசும்போது கூறியதாவது:

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடனும், அவர்களுடைய தொலைநோக்கு திட்டம் 2023-ன் படியும், அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான் இன்று, 2 நாட்கள் நடந்த  2019  உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

முதலீடுகளால் தமிழகத்தில் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.

304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3.42 லட்சம் கோடி முதலீடு கையெழுத்தானது .

தொழில் நிறுவனங்கள் முதலீடு மூலம் 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த இரு நாள் மாநாட்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.  அதனை சிறப்பாக வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மாநாட்டின் வெற்றிக்கு அயராது உழைத்திட்ட தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், கூடுதல் தலைமை செயலாளர் ஞானதேசிகன்,  முதன்மை செயலாளர் சபீதா மற்றும் இணைந்து பணியாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும்,

முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்ட தொழில் முனைவோர்களுக்கும்,

இந்த மாநாடு வெற்றி பெற அயராது உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு, முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றினார்.

முன்னதாக, தொடக்கத்தில் ஆங்கிலத்திலும், பின்னர் தமிழிலும் முதலமைச்சர் ஆற்றிய உரையின் முழு நகல் கீழே தரப்பட்டுள்ளது.

Label