OUR CLIENTS
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை அரசாணை
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை அரசாணை Posted on 24-Jan-2019 போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை அரசாணை

சென்னை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தேர்வு நெருங்கி வரும் வேளையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜாக்டோ-ஜியா அமைப்பு வேலை நிறுத்தம் தொடரும் என இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர்களுக்கு ஊதியம் கிடையாது, வேலை நிறுத்த நாள்களில் சம்பளம் நிறுத்தப்படும் எனவும், வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 3-வது நாள் வேலை நிறுத்தத்தால் அரசு பணிகள், பள்ளி மாணவர்களின் கல்வி  பாதிக்கப்பட்டு வருகிறது.

ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவர்கள் மட்டுமே பாடம் நடத்தும் நிலை இருந்து வருகிறது. மற்ற மாவட்டங்களைப் போல சென்னையிலும் அரசு அலுவலகப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சென்னையில் இன்று கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தடைவிதித்தது. 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வேலைநிறுத்தம் தொடரும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.

ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் கூடி ஆலோசனை நடத்தியது . இந்த கூட்டத்தில் வேலை நிறுத்த போரட்டத்தை தொடருவது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை இன்று அரசாணை வெளியிட்டு உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு விதி 17B-யின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை  தெரிவித்துள்ளது.

Label