OUR CLIENTS
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு புதிய பொறுப்பு!
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு புதிய பொறுப்பு! Posted on 25-Jan-2019 அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு புதிய பொறுப்பு!

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கரூர் வி.செந்தில் பாலாஜி கரூர் மாவட்டக் கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். 
ஏற்கனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட கரூர் மாவட்டக் கழக நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றிய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். 
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நன்னியூர் ராஜேந்திரன், திமுக நெசவாளர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Label