OUR CLIENTS
சீனாவை விட பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் இந்தியா ரகுராம் ராஜன் தகவல்
சீனாவை விட பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் இந்தியா ரகுராம் ராஜன் தகவல் Posted on 25-Jan-2019 சீனாவை விட பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் இந்தியா ரகுராம் ராஜன் தகவல்

டாவோஸ், ஜன.25-

சீனாவை காட்டிலும் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்தர கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ரகுராம் ராஜன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருகிறது. இதனால் சீனாவை காட்டிலும் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. 
சீனாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது குறைந்துள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியா பொருளாதார மேம்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் நாடாக உள்ளது. உலகவங்கியின் அறிக்கையின்படி, 2017-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 6-வது இடத்திலும், சீனா 2-வது இடத்திலும் இருந்தது நினைவுகூறத்தக்கது.

Label