OUR CLIENTS
கிராம சபை கூட்டங்களை நாளை நடத்த கிராம ஊராட்சிகளுக்கு ஆட்சியர் உத்தரவு!
கிராம சபை கூட்டங்களை நாளை நடத்த கிராம ஊராட்சிகளுக்கு ஆட்சியர் உத்தரவு! Posted on 25-Jan-2019 கிராம சபை கூட்டங்களை நாளை நடத்த கிராம ஊராட்சிகளுக்கு ஆட்சியர் உத்தரவு!

வேலூர், ஜன.25-

2019-ம் ஆண்டிற்கான கிராம சபைக்கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் குடியரசு தினமான 26.01.2019 அன்று முற்பகல் 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இக்கிராம சபைக்கூட்டத்தில் கீழ்குறிப் பிட்டுள்ள பொருள்கள் விவாதிக்கப்பட உள்ளது.
அக்டோபர் 2018 முதல் டிசம்பர் 2018 முடியெ கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல். 2019 - 20 ஆம் நிதியாண்டில் பொது நிதியிலிருந்து மேற்டிகாள்ளப்படவிருக்கும் ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கான திட்ட அறிக்கை ஒப்புதல் பெறுதல். குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல். கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். ஊராட்சிப்பகுதிகளில் நடைடிபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம் (விபிடிபி). பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல். மக்கள் திட்டமிடல் இயக்கம். 
முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம். சுகாதார உறுதி மொழியை எடுத்துக் கொள்ளுதல். திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து தக்க வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதித்தல், விடுபட்ட கழிப்பறைகளை கட்டுதல் மற்றும் அதனை தொடர்ந்து பயன்படுத்துதல் குறித்து விவாதித்தல்.
திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்ட ஊராட்சிகளில் கழிப்பறை கட்டி பயன்படுத்தாத நபர்களின் பெயர்களை கிராம சபையில் வாசித்தல். ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஊக்குநரை (மோட்டிவேட்டர்) தேர்ந்தெடுத்தல் மற்றும் சமுதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கழிப்பறைகள் தொடர்ந்து பயன்படுத்துதல் குறித்து விவாதித்தல். 
தூய்மையே சேவை 03.10.2018 முதல் 25.01.2019 வரை இப்பணியில் சிறப்பாக ஈடுபட்டுள்ள அனைத்து ஊக்குநர்கள், சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள், மாணவ மாணவியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து துறைகளை சார்ந்த பணியாளர்களுக்கு பாராட்டும், ஆசிரியர்களுக்கு நன்றியும் தெரிவித்தல் மற்றும் சுகாதார நிலையினை தக்க வைத்தல் குறித்து விவாதம் மேற்கொள்ளுதல்.
ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்தல். கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல். திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தல். ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் செயல்பாடு குறித்து விவாதித்தல்.  பள்ளிக்கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக்கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருப்பது குறித்து விவாதித்தல். திடக்கழிவு மேலாண்மை திட்டம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை கழிவுகளை அகற்றுவதன் மூலம் சுகாதார மேம்பாட்டை உறுதி செய்தல். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணிகளின் விவரம் மற்றும் 2018- 19 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு செலவு திட்டம். 
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமாரிப்பு குறித்து விவாதித்தல். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க செயல்பாடுகள் தொடர்பான பொருட்கள். ஊராட்சி மன்ற தனி அலுவலரால் கொண்டு வரப்படும் இதரப்பொருட்கள் குறித்து விவாதித்தல். மேற்படி கிராம சபைக்கூட்டங்களில் வட்டாட்சியர் களை பார்வையாளர்களாக கலந்து கொள்ள கோரப்பட்டுள்ளது. கிராம சபைக்கூட்டம் நடை பெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமனால் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Label