OUR CLIENTS
ஆண்டிபட்டியில் அழிந்துவரும் தென்னை விவசாயம்!
ஆண்டிபட்டியில் அழிந்துவரும் தென்னை விவசாயம்! Posted on 25-Jan-2019 ஆண்டிபட்டியில் அழிந்துவரும்  தென்னை விவசாயம்!

ஆண்டிபட்டி, ஜன.25-

ஆண்டிபட்டி பகுதியில் பயிர் செய்யப்பட்ட தென்னை மரங்கள் அழிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இந்நகரை சுற்றியுள்ள புள்ளிமான்கோம்பை, டி.அணைக்கரைபட்டி, கன்னியமங்களம், வேகவதி ஆசிரமம், சீரெங்கபுரம், கோவில்பட்டி, திருமலாபுரம், குன்னூர் ஆகிய கிராமங்கள் வைகை ஆற்று கரையோரங்களில் அமைந்துள்ளதால் அதிகளவில் தென்னை மரங்கள் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஏத்தக்கோவில், திம்மரசநாயக்கனூர், வரதராஜபுரம், பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, கணேசபுரம், ஜி.உசிலம்பட்டி, எம்.சுப்புலாபுரம் ஆகிய கிராமங்கள் மட்டுமின்றி கடமலைமயிலை ஒன்றியத்திலும் இணைந்து சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் பயிடப்பட்டுள்ளனர். இதனால் இளநீர், தேங்காய்கள் தாராளமாக கிடைத்தது. 
ஆனால் கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக போதிய மழை இப்பகுதியில் பெய்யவில்லை. குறிப்பாக கடமலைமயிலை ஒன்றியம் பகுதியில் உள்ள வருசநாடு, வெள்ளிமலை ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் போதிய பெய்யாததால் வைகை ஆறு வறண்டது. இதனால் நீர் நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றது. இதனைத் தொடர்ந்து கொட்டை முந்தரி, முருங்கை, தென்னை உள்ளிட்ட மரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து அழிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென்னை மர அழிவின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

Label