OUR CLIENTS
மக்காத குப்பைகளின் அளவு 22 டன்னாக குறைந்துள்ளது-மாநகராட்சி ஆணையர்!
மக்காத குப்பைகளின் அளவு 22 டன்னாக குறைந்துள்ளது-மாநகராட்சி ஆணையர்! Posted on 25-Jan-2019 மக்காத குப்பைகளின் அளவு 22 டன்னாக  குறைந்துள்ளது-மாநகராட்சி ஆணையர்!

வேலூர், ஜன.25-

பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை உத்தரவை அடுத்து, வேலூர் மாநக ராட்சியில் நாளொன்றுக்கு சேகரிக்கப்பட்டு வந்த மக்காத குப்பைகளின் அளவு 40 டன்னிலிருந்து 22 டன்னாக குறைந் துள்ளது என்று மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் மாசை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை விதிக்கப் பட்டது. இதை யடுத்து, அரசாணைப்படி 14 வகையான பொருள்கள் உற்பத்தி, விற்பனை, நுகர்வு முழுமையாக தடுக்கப்பட்டிருப்பதுடன், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிப் பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். 
வேலூர் மாநகராட்சிப் பகுதியிலும் பிளாஸ்டிக் பொருள்கள் தடை குறித்து ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன் சில மாதங்களாகவே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன்காரணமாக, ஜனவரி 1 முதல் மாநகராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனை, பயன்பாட்டு அளவு பெருமளவில் குறைந் திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இம்மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளிலும் 1.28 லட்சம் வீடுகள் உள்ளன. அவற்றில் இருந்து நாளொன்றுக்கு 200 டன் அளவுக்கு குப்பைகள் பெறப்படுகின்றன. இவற்றில் மக்காத குப்பைகள் மட்டும் சுமார் 40 டன் பெறப்பட்டு வந்தன. ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு வழக்கமாக சேகரிக்கப்படும் 40 டன் மக்காத குப்பைகள் தற்போது 22 டன்னாக குறைந் துள்ளதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது: பிளாஸ்டிக் தடை உத்தர வுக்குப் பிறகு, தற்போது ஒவ்வொரு வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளில் மக்காத குப்பைகளின் அளவு 15 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என பொதுமக்களே பிரித்து வழங்குவதும் அதிகரித் துள்ளது. இதனால் மாநகராட்சிக்கு உள்பட்ட 42 திடக்கழிவு மேலாண்மை கிடங்குகளில் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணிகளில் நிலவிய சிரமமும் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

Label