OUR CLIENTS
காவிரியில் கர்நாடக கழிவுநீரா? ஆய்வு செய்ய வலியுறுத்தல்
காவிரியில் கர்நாடக கழிவுநீரா? ஆய்வு செய்ய வலியுறுத்தல் Posted on 25-Jan-2019 காவிரியில் கர்நாடக கழிவுநீரா? ஆய்வு செய்ய வலியுறுத்தல்

வேலூர், ஜன.25-

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ள நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு வருவது கழிவுநீரா என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கர்நாடகாவில் 2018ல் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்ததால் தமிழகத்திற்கு 396 டி.எம்.சி., நீர், காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. 
இது உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்த அளவை காட்டிலும் 219 டி.எம்.சி., அதிகம். தற்போது கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. பெங்களூரு உள்ளிட்ட நகரங்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து,நீர் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் 2018 நவம்பரில் 7.12 டி.எம்.சி., - டிசம்பரில், 7.12 டி.எம்.சி., - இந்த மாதம் 20ம் தேதி நிலவரப்படி 1.74 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள அணைகளில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் காவிரியில் வருவது கழிவுநீரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே தமிழகத்திற்கு வரும் காவிரியில் கர்நாடக உள்ளாட்சி அமைப்புகள் கழிவுநீரை வெளியேற்றி வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே தற்போது தமிழகத்திற்கு வரும் நீரின் தன்மையை காவிரி தொழிற்நுட்ப குழுவினர் மற்றும் பொதுப் பணித்துறையினர் வாயிலாக ஆராய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது: காவிரியில், பல, டி.எம்.சி., கழிவு நீரை கர்நாடக அரசு வெளியேற்றி வருவது கண்டு பிடிக்கபட்டுள்ளது. எனவே தற்போது தமிழகத்திற்கு வருவது கழிவுநீராக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.இதை கண்டறிந்து காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சட்ட ரீதியான நட வடிக்கையை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Label