OUR CLIENTS
முதலீட்டாளர்களை கவர்ந்த சிறிய ட்ரோன் ஆம்புலன்ஸ்!
முதலீட்டாளர்களை கவர்ந்த சிறிய ட்ரோன் ஆம்புலன்ஸ்! Posted on 25-Jan-2019 முதலீட்டாளர்களை கவர்ந்த   சிறிய ட்ரோன் ஆம்புலன்ஸ்!

சென்னை,  ஜன.25-

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சென்னை அண்ணா பல்கலை மாணவர்கள் உருவாக்கிய ட்ரோன் ஆம்புலன்ஸ் பார்வையாளர்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

அண்ணா பல்கலை, எம்.ஐ.டி., வளாகத்தில் உள்ள வானூர்தி ஆய்வு மைய மாணவர்கள் ஆளில்லா விமானமான ட்ரோன் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மனிதர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் வகையிலான ட்ரோன் ஆம்புலன்ஸ்களை வடிவமைத்துள்ளனர்.
அதாவது பேரிடர்கள் மற்றும் விபத்துக்களால் பாதிக்கப்பட்டோரை சாலை மார்க்கமாக சிகிச்சைக்கு அழைத்து செல்லும் போது போக்குவரத்து நெரிசல் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. இது போன்ற சிரமங்களை தவிர்க்க ஒரு நபர் மட்டுமே பயணிக்கும் வகையில் இந்த ட்ரோன் ஆம்புலன்ஸ்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. சோதனையில் வெற்றி பெற்றுள்ள ட்ரோன் ஆம்புலன்ஸ் முதலீட்டாளர்கள் மாநாட்டில் காட்சிப் படுத்தப்பட்டு இருந்தது. இது பேட்டரியில் இயக்கப்படுகிறது.
அதிகபட்சம் 2 கி.மீ., வரை பயணம் செய்ய பயன்படுத்தலாம். மனிதர்கள் பயணிக்கும் ட்ரோன் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்படாததால் இந்த ட்ரோன் ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது என மாணவர்கள் கூறினர்.

Label