OUR CLIENTS
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மோதலுக்கு பாஜகவே காரணம்: அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மோதலுக்கு பாஜகவே காரணம்: அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா Posted on 26-Jan-2019 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மோதலுக்கு பாஜகவே காரணம்: அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா

பெங்களூரு, ஜன.26-

கர்நாடகத்தில் கேளிக்கை விடுதியில் தங்கியிருந்த போது எம்எல்ஏக்கள் இருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்துக்கு பாஜகவே காரணம் என உயர் கல்வித் துறை அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ், மஜத கட்சிகளின் கூட்டணியில் மாநிலத்தில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை பொறுக்கமுடியாத பாஜகவினர் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
ஆபரேஷன் கமலா திட்டத்தில் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களை பாஜகவிற்கு இழுக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக அண்மையில் கேளிக்கை விடுதிகளில் தங்கவைக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆனந்த்சிங், கணேஷ் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்கு முன்பு ஆனந்த் சிங்குற்கும், கணேஷிற்கும் இடையே பாஜகவுக்கு செல்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவே அவர்களிடையே தகராறு ஏற்பட்டு மோதல் உருவாகியுள்ளது. இதற்கு பாஜகவே காரணம். 
பாஜகவினர் காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, பயனடைய பாஜகவினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.  

Label