OUR CLIENTS
பாஜக வீசிய வலையை அறுத்தெறிந்த தல அஜித்குமார்!
பாஜக வீசிய வலையை அறுத்தெறிந்த தல அஜித்குமார்! Posted on 26-Jan-2019 பாஜக வீசிய வலையை அறுத்தெறிந்த தல அஜித்குமார்!

வேலூர், ஜன.26-

பாஜக தனக்கு வீசிய வலையை அறுத்தெறிந்தார் தல அஜித்குமார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது திரைப்பட துறை சம்மந்தப்பட்ட விழாக்களுக்கே அரிதாக தலை காட்டும் தல அஜித் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பை கிளறிவிட்டது. பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்ட கருத்து பொங்கலையொட்டி வெளியான அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கோயம்புத்தூரில் அஜித் ரசிகர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் பாஜகவில் சேர்ந்தனர். அப்போது தமிழிசை சௌந்தர்ராஜன், இனி மோடியின் சாதனைகளை அஜித் ரசிகர்கள் பரப்ப வேண்டும் என்றார்.
இது அரசியல் களத்திலும் திரையுலகிலும் பரபரப்பை கிளப்பியது. ரஜினி காந்த்தில் தொடங்கி விஜய் வரை பலரது அரசியல் என்ட்ரியும் எதிர்பார்க்கப்படும் நிலையில், அஜித்தை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலாக பரவின. இதற்கு உடனடியாக ரியாக்ட் செய்த அஜித், எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் கிடையாது. என்மீதோ ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதால்தான் ரசிகர் இயக்கங்களை கலைத்தேன். என் பெயரோ படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம் பெறுவதை நான் விரும்பவில்லை என தெளிவாக அறிக்கை வெளியிட்டார். 
தமிழ்நாட்டில் எப்படியாவது வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும் என நினைக்கும் பாஜக பொங்கல் ஹிட் படமான விஸ்வாசம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அஜித்தை குறி வைத்து சர்ச்சையாக்கியிருந்தாலும் கடந்த சில மாதங்களாகவே அவருக்கு வலைவீசி வந்தது. ரஜினிகாந்த் சரியான பிடி கொடுக்காத நிலையில் அஜித்தின் நண்பர்களில் யார் யார் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார்களோ அவர்கள் உதவியுடன் அஜித்தை வளைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது அனைவருக்கும் நன்கு தெரியும்.
கடந்த 2018ல் அஜித் வீட்டு கதவை அப்போது தட்டியதற்கு பலனில்லாத நிலையில் அஜித் ரசிகர்கள் வாயிலாக இப்போது குட்டையை குழப்ப நினைத்தது பாஜக. ஆனால், அந்த வலையை கச்சிதமாக அறுத்தெறிந்து தனது ரசிகர்களுக்கும் மெசேஜ் சொல்லிவிட்ட தல அஜித், அநுத அறிக்கையின் கடைசியில் வாழு வாழவிடு என்று முடித்திருப்பது பாஜக தலைமைக்கு பளிச்சென சொன்ன செய்தியாக உள்ளது. 

Label