OUR CLIENTS
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவில் குழு அமைப்பு!
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவில் குழு அமைப்பு! Posted on 26-Jan-2019 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவில் குழு அமைப்பு!

சென்னை, ஜன.26-

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில்  அரசியல் கட்சிகள் தங்கள் வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.   
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி குறித்த கணக்குகளில் ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அவரையும் சேர்த்து ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர்தான் கூட்டணி குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அவர்கள் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்திடம் தகவல் தெரிவிப்பர். அவரது ஒப்புதல் இருந்தால் மட்டுமே கூட்டணி இறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Label