OUR CLIENTS
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு அலுவலகமாக சென்ற குரங்கு!
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு அலுவலகமாக சென்ற குரங்கு! Posted on 26-Jan-2019 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு அலுவலகமாக சென்ற குரங்கு!

வேலூர், ஜன.26-

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு அலுவலகமாக குரங்கு ஒன்று சென்று பார்த்து விட்டு சென்றவாறு இருந்தது. அந்த குரங்கு கோரிக்கை மனு கொடுக்க சென்றதா? அல்லது வேறு ஏதாவது தேவைக்காக சென்றதா? என்பது குரங்குக்கே வெளிச்சம்.

வேலூர் மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அலுவலகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு குரங்கு திடீரென வந்தது. அந்த குரங்கு ஒவ்வொரு அலுவலகமாக சென்று பார்த்தது. அங்கிருந்த அலுவலகத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதை உன்னிப்பாக கவனித்தவாறு பக்கத்தில் உள்ள அறை கதவை கண்காணித்தது. வரிசையாக அனைத்து கதவுகளும் மூடப்பட்டு இருப்பதை பார்த்து விட்டு அந்த குரங்கு கவலை தோய்ந்த முகத்துடனும், ஏமாற்றத்துடனும் திரும்பிச் சென்றது. இந்த குரங்கு ஏன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்தது என்பது தெரியவில்லை. அந்த குரங்குக்கு ஏதாவது பிரச்னையா? அல்லது மதிய உணவு கிடைக்குமா? என்று வந்ததா? என்று தெரியவில்லை. இல்லை தனது பிரச்னை தீர மாவட்ட அலுவலர்களிடம் புகார் மனு கொடுக்க வந்ததா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த குரங்கு யாரை தேடி அங்கு வந்தது என்பதும் சிதம்பர ரகசியமாக உள்ளது. இதனால் அங்கிருந்த பலரும் அந்த குரங்கின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்தவாறு இருந்தனர். இந்த நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்தது என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாகும். ஜெய் ஹனுமான்!.

Label