OUR CLIENTS
சப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா
சப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா Posted on 26-Jan-2019 சப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா

தோசை, இட்லி, சப்பாத்தி, இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் வெள்ளை காய்கறி குருமா. இன்று இந்த குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா
தேவையான பொருள்கள்
பெரிய வெங்காயம் - 1
 தக்காளி - 3
உருளைக்கிழங்கு - 2
பீன்ஸ் - 50கிராம்
கேரட் - 50கிராம்
பட்டாணி - 50கிராம்
பச்சை மிளகாய் - 5
தேங்காய்துருவல் - கால்மூடி
கசகசா - அரை ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு,
சோம்பு - 1  ஸ்பூன்
முந்திரி பருப்பு  - 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1  ஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்  - 5 ஸ்பூன்
தாளிக்க 
கிராம்பு
பட்டை
ஏலக்காய்
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். 
பச்சை மிளகாய், தேங்காய்துருவல், கசகசா, சோம்பு, முந்திரி பருப்பு அனைத்தையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.
காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்த்து   நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இதோ சுவையான வெஜிடபிள் வெள்ளை குருமா ரெடி.

Label