தேர்தல் ஆணையத்தின் கண்டனத்துக்குள்ளான திமுக தேர்தல் அறிக்கையின் இலவசங்கள் Posted on 31-Aug-2016
சென்னை:
தேர்தல் அறிக்கையில் இலவசங்களை வழங்குவதாக அறிவித்துவிட்டு அதற்கான நிதி ஆதாரங்களை வெளிப்படையாக தெரிவிக்காததற்கு திமுக, அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதிக்கு தேர்தல் ஆணையம் கண்டனக் கடிதம் அனுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கண்டனத்துக்குள்ளாகும் வகையில் கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய இலவச அறிவிப்புகள்:
• விவசாயிகளுக்கு கடன்கள் முழுக்க தள்ளுபடி
• அனைத்து விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்
• ஆவின் பால் லிட்டருக்கு ரூ.7 வரை குறைக்கப்படும்
• விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்
• சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் நிதி வழங்கப்படும்
• தமிழகம் முழுவதும் முதியோருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை
• மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்
• தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவோடு பால் வழங்கப்படும்
• மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை
• மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி
• கல்லூரிகளில் படிக்கும் 16 லட்சம் மாணவர்களுக்கு 3ஜி,4ஜி தொழில்நுட்பத்தில் மாதம் 10 ஜிபி பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்ட இணைய இணைப்புக்கான டாங்கிளுடன் லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கப்படும்.