OUR CLIENTS
அம்மா ஸ்கூட்டி வேண்டும் மகளிர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
அம்மா ஸ்கூட்டி வேண்டும் மகளிர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! Posted on 26-Jan-2019 அம்மா ஸ்கூட்டி வேண்டும் மகளிர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை, ஜன.26-

தமிழகம் முழுவதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மகளிர் பணியிடங்களுக்கு எளிதில் செல்ல இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது 25,000 ரூபாய் மானியத்தொகையும்,
மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு 75 சதவீதம் ரூ.31,250- மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரகபகுதி மகளிர் 2806 நபர்களுக்கும் நகர்புறப்பகுதியில் 712 நபர்களுக்கும் என மொத்தம் 3518 நபர்கள் 2018- 2019ம் ஆண்டு பயனடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தில் பயன்பெற கீழ்காணும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
· அரசு பணியில் உள்ள கீழ்நிலை பணியாளா; முதல் மேல்நிலை பணியாளர் வரை அனைத்து பணியாளர்களுக்கும் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.
· ஒரு குடும்பத்திற்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
· பதிவு பெற்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களாக இருத்தல் வேண்டும்.
· குறைந்தது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி 
· தனியரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்குள் இருத்தல் வேண்டும்
· 125 சிசி திறனுக்கு மிகாமல் வாகனம் இருத்தல் அவசியம். ஆட்டோ கியர் கியர் அல்லாத வாகனமாக இருத்தல் வேண்டும்.
· வாகனம் பயனாளி சொந்த நிதியிலோ (அ) வங்கி (அ) நிதி நிறுவன கடன் வசதி மூலமோ கொள்முதல் செய்யலாம்.
· வாகனம் 01.01.2018ற்கு பிறகு தயாரிக்கப்பட்டு வாகன பதிவுகள் சட்டத்தின்படி பதிவு செய்யக்கூடிய வாகனமாக இருக்க வேண்டும்.
· 3 ஆண்டுகள் வரை வாகனத்தை விற்க இயலாது.
· தனியரது வயது வரம்பு 18 முதல் 40 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
· இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருத்தல் வேண்டும்.
· குக்கிராமங்களிலிருந்து பணிபுரிபவர் மலைபகுதியில் பணிபுரிபவர், பெண்களை குடும்ப தலைவராக கொண்டவர், கணவனால் கைவிடப்பட்டவர், இளம் விதவை, மாற்றுத்திறனாளி பெண்கள்,
முதிர்கன்னிகள், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
· வயது சான்றிதழ்
· இருப்பிட சான்றிதழ்
· ஓட்டுனர் உரிமம்
·வருமான சான்றிதழ்
· பணிசெய்வதற்கான ஆதார சான்றிதழ்
· ஆதார் அட்டை
· கல்வி தகுதி சான்றிதழ்
· பாஸ்போர்ட் போட்டோ
· சாதி சான்றிதழ் (எஸ்.சி./எஸ்.டி.) மட்டும்
· மாற்றுதிறனாளி அடையாள அட்டை
· முன்னுரிமை கோரும் சான்றிதழ்
· கொள்முதல் செய்யும் வாகனத்தின் விலைப்புள்ளி
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இரண்டு கட்ட அளவில் கள ஆய்வு சரிபார்க்கப்படும். உரிய விண்ணப்பங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியரகம் (மகளிர் திட்டம்) கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சம்மந்தப்பட்ட பகுதி அலுவல கங்களில் தினசாரி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனைத்து வேலைநாட்களிலும் சமர்ப்பித்து ஒப்புகை ரசீது பெற்றுக்கொள்ளவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி 31.01.2019 மாலை 5.00 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து வேலைக்கு செல்லும் மகளிரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு 31.01.2019 மாலை 5.00 மணிக்குள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலோ, பேரூராட்சி அலுவலகத்திலோ நகராட்சி அலுவலகத்திலோ தங்கள் விண்ணப்பங்களை சேர்க்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், காந்திநகர் 7வது தெரு, திருவண்ணாமலை என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி தெரிவித் துள்ளார். இத்தகவலை திருவண்ணா மலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பத்திரிகை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Label