OUR CLIENTS
நகை, பணம் கிடைக்காத ஆத்திரம் வீட்டிற்கு தீ வைத்த திருடர்கள்!
நகை, பணம் கிடைக்காத ஆத்திரம் வீட்டிற்கு தீ வைத்த திருடர்கள்! Posted on 26-Jan-2019 நகை, பணம் கிடைக்காத ஆத்திரம் வீட்டிற்கு தீ வைத்த திருடர்கள்!

பொள்ளாச்சி, ஜன.26-

பொள்ளாச்சியில் பூட்டிய வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் நகை, பணம் கிடைக்காததால் பொருட்களுக்கு தீ வைத்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் குமார்(44). கருமத்தம்பட்டியில் டாஸ்மாக் சூப்பர்வைசராக பணிபுரிகிறார். மனைவி அம்சவேணி. கோயம்புத்தூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இரு குழந்தைகளுடன் சரவணம்பட்டியில் வசிக்கின்றனர். இவர்களுக்கு பொள்ளாச்சி அருள்ஜோதி நகரில் சொந்தமாக வீடு உள்ளது.  நேற்று முன்தினம் இரவு பூட்டியிருந்த குமாரின் வீட்டுக்குள் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். 
போலீசார் கூறுகையில், மர்ம நபர்கள் பீரோவில் நகை, பணம் இருக்கிறதா என்று தேடி உள்ளனர். எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில் பொருட்களுக்கு தீ வைத்து உள்ளனர்.  கட்டில், மின் விசிறி, மெத்தை, அலமாரிகள், டிவி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சேதமாகின என்றனர். குமார் கூறுகையில், வாரத்தில் சனி, ஞாயிறு பொள்ளாச்சி வீட்டில் தங்குவோம். மற்ற நாட்களில் அருகில் வசிக்கும் மனைவியின் பெற்றோர் வீட்டை பார்த்துக் கொள்வர். தீயில் கல்வி சான்றிதழ்கள், அனைத்து ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. காஸ் சிலிண்டர், வீட்டுக்கு வெளியே இருந்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்றார்.

Label