OUR CLIENTS
குடியரசு தின விழா: காலி மைதானத்தை பார்த்து உரையாற்றிய மிசோரம் கவர்னர்
குடியரசு தின விழா: காலி மைதானத்தை பார்த்து உரையாற்றிய மிசோரம் கவர்னர் Posted on 26-Jan-2019 குடியரசு தின விழா: காலி மைதானத்தை பார்த்து உரையாற்றிய மிசோரம் கவர்னர்

அய்சால், ஜன.26-

குடியரசு தின விழா புறக்கணிப்பு அழைப்பின்பேரில் பொதுமக்கள் கலந்து கொள்ளாததால் மிசோரம் கவர்னர் காலி மைதானத்தை பார்த்து உரையாற்றினார்.

நாடு முழுவதும் 70 -வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  மிசோரமில் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் அவர் உரையாற்றினார். ஆனால் அவரது பேச்சை கேட்க யாரும் இல்லை.
குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவுக்கு எதிராக ஒரு குடையின் கீழ் மாநிலம் முழுவதும் குடியரசு தினவிழா புறக்கணிப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் குடியரசு தின விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ளவில்லை. இதில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர் என போலீசார் தெரிவித்தனர். அரசு சாரா ஒருங்கிணைப்புக்குழு, சிவில் சமுதாய குழுக்களின் அமைப்பு மற்றும் மாணவர் அமைப்புகளின் அமைப்பான என்ஜிஓ ஒருங்கிணைப்புக்குழுவால் புறக்கணிப்பு போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 
இதுபோல் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் துணை ஆணையர் அலுவலகங்களிலும் மூத்த அதிகாரிகளும், பொதுமக்களும் இல்லாத நிலையில் துணை ஆணையர்கள்  இந்த விழாவை முடித்து கொண்டனர்.
குடியரசு தின கொண்டாட்டங்கள் அரங்கிற்கு அருகே ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் இருப்பினும், எந்தவித அசம்பாவித சம்பவமும் இல்லாமல் அமைதியாக சென்றன என போலீசார் தெரிவித்தனர்.
கவர்னர்  கும்மனம் ராஜசேகரன் கூறும்போது, மாநில எல்லைகளை பாதுகாப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நலன்பயக்கும் திட்டங்களை வழங்குவதில்  முக்கியத்துவம் அளிக்கப்படும். அரசியலமைப்பு கட்டமைப்பில் இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மிசோரம் மக்களின் ஒற்றுமைக்கும், சகோதரத்துவத்திற்கும் இந்த அரசாங்கம் உழைக்கும்.
மிசோரம் சமூக-பொருளாதார அபிவிருத்தி கொள்கை (SEDP) அறிமுகப்படுத்தப்படும்."சமூக-பொருளாதார மாற்றத்தை கொண்டு வருவதை நோக்கமாக கொண்ட முழுமையான ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம்" கொண்டு வரப்படும் என கூறினார்.

Label