OUR CLIENTS
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் ஏற்கப்படும், அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் ஏற்கப்படும், அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன் Posted on 26-Jan-2019 ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் ஏற்கப்படும், அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை, ஜன.26-

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் ஏற்கப்படும், அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.
ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும், சாத்தியமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசு தரப்பிலிருந்து போராட்டம் குறித்து இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனைக்கு பிறகு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், "ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் ஏற்கப்படும், அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என கூறினார்.

Label