OUR CLIENTS
போராடும் அரசு ஊழியர்களை அரசு அச்சுறுத்தவில்லை அவர்கள் தான் அச்சுறுத்துகிறார்கள்- அமைச்சர் ஜெயக்குமார்
போராடும் அரசு ஊழியர்களை அரசு அச்சுறுத்தவில்லை அவர்கள் தான் அச்சுறுத்துகிறார்கள்- அமைச்சர் ஜெயக்குமார் Posted on 28-Jan-2019 போராடும் அரசு ஊழியர்களை அரசு அச்சுறுத்தவில்லை அவர்கள் தான் அச்சுறுத்துகிறார்கள்- அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, ஜன.28-

போராடும் அரசு ஊழியர்களை அரசு அச்சுறுத்தவில்லை அவர்கள் தான் அச்சுறுத்துகிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு வருவாயில் 71 சதவீத பணம் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டவைகளுக்கு செலவாகிறது. 29 சதவீத தொகை தான் மக்கள் நல திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது.
போராட்டத்தை கைவிட்டு அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.  மாணவர்களின் எதிர்காலத்தை ஆசிரியர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
போராடும் அரசு ஊழியர்களை அரசு அச்சுறுத்தவில்லை. அவர்கள் தான் மிகப்பெரிய சக்தி என்று தமிழக அரசை அச்சுறுத்துகிறார்கள். அரசு ஊழியர் சங்கங்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அரசின் சிரமங்கள் தெரிவிக்கப்பட்டன  என கூறியுள்ளார்.

Label