OUR CLIENTS
தேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் செல்போனில் பேச்சு! காணொலியில் சிக்கிய சென்ட்ரல் ரயில்வே அதிகாரி!
தேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் செல்போனில் பேச்சு! காணொலியில் சிக்கிய சென்ட்ரல் ரயில்வே அதிகாரி! Posted on 28-Jan-2019 தேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் செல்போனில் பேச்சு! காணொலியில் சிக்கிய சென்ட்ரல் ரயில்வே அதிகாரி!

சென்னை, ஜன.28-

குடியரசு தினத்தில் கொடியேற்றிய சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரி கொடியேற்றிய பின் தேசிய கீதம் பாடும்போது செல்போனை எடுத்துப் பேசிய காணொலிக் காட்சி வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த ஆகஸ்ட் 15-ம் தேதியும், அரசியலமைப்புச் சட்டம் அறிமுகமாகிய ஜனவரி 26 குடியரசு தினமும் இந்தியக் குடிமக்களுக்கு முக்கியமான நாட்களாகும். அன்றைய தினம் டெல்லியில் குடியரசுத் தலைவர், பிரதமர், மாநிலத் தலைநகரங்களில் முதல்வர், ஆளுநர் பங்கேற்று கொடியேற்று வார்கள். ஆகஸ்ட் 15-ம் நாள் கோட்டையில் மாநில முதல்வர் கொடியேற்ற வேண்டும் என்பதை உரிமையாக கேட்டு வாங்கி கொடியேற்றப்படுகிறது.
அதுதவிர பள்ளிகள், அரசு அலுவலகங்கள், நீதி மன்றங்கள், காவல்துறை, ரயில்வே உள்ளிட்ட இடங்களில் அணிவகுப்பு மரியாதையுடன் ஆட்சியர்கள், நீதிபதிகள், காவல் உயர் அதிகாரிகள், கல்வி அலுவலர்கள், விஐபிக்கள் பங்கேற்று கொடியேற் றுவார்கள். கொடியேற்றி வைக்கும் பேறு அனைவருக்கும் கிடைத்துவிடாது. ஆனால் அதன் மகிமையை உணராத வர்கள் பொறுப்பில் அமரும்போது அவர்களில் சிலரின் செயல்களால் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது. தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் அவமதிப்பது தண்டனைக் குரிய குற்றமாகும். ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரின் அணிவகுப்பு நடைபெற்றது.
அணிவகுப்பு மரியாதையை டெபுடி ஸ்டேஷன் மாஸ்டர் அந்தஸ்த்தில் உள்ள அதிகாரி ரவிக்குமார் என்பவர் ஏற்றுக்கொண்டார். பின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அப்போது தேசிய கீதம் பாடப்பட்டது. தேசிய கீதம் பாடும்போது ரவிக்குமாருக்கு செல்போன் வர அவர் ஒரு கையால் தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்துக் கொண்டே இடதுகையால் போனை எடுத்து அதன் நம்பரைப் பார்த்து பின் பேசத் தொடங்கினார். இதை மற்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டே தேசிய கீதத்தைப் பாடினர். இந்தச் செயலை செல்போனில் படமெடுத்த ஒருவர் வாட்ஸ் அப்பில் போட்டுவிட அது வைரலாகியுள்ளது.
இதற்கிடையே தேசிய கீதம் பாடல் சரியாக இசைக்கவில்லை என தான் ஊழியருக்கு போன் செய்து சொன்னதாக ரவிக்குமார் கூறியுள்ளார். தேசிய கீதம் ஏற்கெனவே பாடும்போது மற்றவர்கள் சல்யூட் பொசிஷனில் நிற்கும்போது இவர் மட்டும் செல்போனில் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்துகொண்டு தான் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பம்மல் நகராட்சித் தலைவர் இளங்கோவன் செல்போன் பேசியபடி தேசியக் கொடியை ஏற்றியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் அப்போது போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
கடந்த 2013-ம் ஆண்டு ஆம்பூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றும்போது செல்போனில் பேசிய அரசு மருத்துவர் கென்னடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அவர் ஆம்பூர் மருத்துவமனை வளாகத்தில் ஒருவாரம் தேசியக் கொடியை ஏற்றிவைத்து தேசிய கீதம் பாடவேண்டும். அதை ஆம்பூர் ஆய்வாளர் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரி சிக்கியுள்ளார். அவர் மீதும் சட்ட நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

Label