OUR CLIENTS
தொகுதி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற துரைமுருகன் சு.ரவி எம்எல்ஏ ஆவேச பேச்சு
தொகுதி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற துரைமுருகன் சு.ரவி எம்எல்ஏ ஆவேச பேச்சு Posted on 28-Jan-2019 தொகுதி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற துரைமுருகன் சு.ரவி எம்எல்ஏ ஆவேச பேச்சு

வேலூர், ஜன.28-

தொகுதி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றவர் துரைமுருகன் என்று சேர்க்காட்டில் அதிமுக சார்பில் நடந்த எம்ஜிஆரின் 102வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அரக்கோணம் தொகுதி எம்எல்ஏவும், அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான சு.ரவி பேசினார்.

துரைமுருகன் இந்த தொகுதிக்கு வேஸ்ட். தொகுதி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றவர். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து தொகுதிக்கு என்ன பயன். பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசுக்கு ஒப்புதல் அளித்து முழு காரணமானவர் துரைமுருகன்தான். மன்னார்குடி மாஃபியாக்களுடன் கைகோர்த்து கொண்டு அம்மாவின் ஆட்சியை அகற்ற முற்படுகிறார்கள். அது எக்காலத்திலும நடக்காது. பதினோரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உலக முதலீட்டார்கள் மாநாட்டை நடத்தி அதன் மூலம் பெற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. நம் அரக்கோணம் தொகுதியை மீண்டும் கைப்பற்றி கழகத்தை வழிநடத்தும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ஆகியோரது பாதத்தில் சமர்பிப்போம் என  சு.ரவி எம்.எல்.ஏ., இந்த கூட்டத்தில் சபதம் எடுத்தார்.

Label