OUR CLIENTS
சேர்க்காட்டில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!
சேர்க்காட்டில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்! Posted on 28-Jan-2019 சேர்க்காட்டில் எம்ஜிஆர் 102வது  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

வேலூர், ஜன.28-

காட்பாடி தொகுதி சேர்க்காட்டில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 102வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

வேலூர் கிழக்கு மாவட்டம், காட்பாடி தொகுதி அ.இ.அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு சேர்க்காடு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான ஜூடோ, கைப்பந்து, பால் பேட்மின்ட்டன், தடகளப்போட்டி, ஹாக்கி,  கோ-கோ, த்ரோ பால் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தி போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கோப்பைகள், மற்றும் விளையாட்டு உடைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. டி..ரமாதேவி எம்.ஆர்.ரெட்டி தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ், பேரவை.ஏ.ரவி, பி.ஜனார்த்தனன் வரவேற்புரையாற்றினர், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., மாநில கழக சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர் எஸ்.அப்துல்ரஹீம், தலைமைக்கழக பேச்சாளர் செங்கை. கோவிந்தராஜன், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி, கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ., செஞ்சி ஜி.லோகநாதன், வேலூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, சுமைதாங்கி ஏழுமலை, வி.ராமு, என்.எழிலரசன், 8வது வட்ட கழக பொருளாளர் சி.பாலாஜி, ஜே.வி.ஆர். வெங்கட்ராமன், டி.என்.ஜெயகாந்தன் மற்றும் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Label