OUR CLIENTS
மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு!
மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு! Posted on 28-Jan-2019 மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு!

வேலூர், ஜன.28-

மாற்றுத்திறனாளி வாக்காளர்களை முழுமையாக வாக்களிக்க செய்யும் வகையில் அவர்களை வாக்குசாவடிக்கு அழைத்து செல்ல வீட்டிற்கு அரசு செலவில் ஆம்புலன்ஸ் அனுப்பிடும் நடவடிக்கையை தேர்தல்  ஆணையம் வரும் பாராளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள உள்ளது.

தேர்தல் நடைமுறைகளை, வலுவான தாகவும், நேர்மையானதாகவும், நம்பகத் தன்மையுடையதாகவும் மாற்றுவதற்காக அரசியல் கட்சிகள் தெரிவிக்கும்  கருத்துகளைத் தேர்தல் ஆணையம் ஏற்று அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கிய தேர்தல் நடைமுறைகளை உருவாக்கும்  நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 
நடைமுறை சார்ந்த வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் நடைமுறைகளின்படி, வாக்காளர் களிடம் விழிப் புணர்வை அதிகப்படுத்தவும் தேர்தலில் அதிக அளவு பங்கேற்கச் செய்வதற்கும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை களை  மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர் களையும் வாக்காளிக்க செய்யும் நடவடிக்கை களையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. 
இதன் ஒரு  பகுதியாக 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி வாக்காளர்களை பதிவு செய்யவும், அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கிடவும் தேர்தல் அலுவலர்கள் பணிகளை செய்து வருகின்றனர். இவை தவிர  மாற்றுத்திறனாளி வாக்காளர் விபரங்களை தாலுகா வாரியாக சேகரித்திடவும் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் வாக்குசாவடிக்கு வரும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களை  வளாகத்தில் இருந்து வாக்குசாவடிக்கு அழைத்து செல்ல ஏதுவாக சக்கர நாற்காலிகள் நிறுத்திவிடப்பட்டிருக்கும்.
 இதற்காக சாய்வுதள பாதையும் உருவாக்கப்பட்டிருக்கும். வாக்குசாவடிக்கு வரும் மாற்றுத்திறனாளி வாக்காளர் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்களிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. வரும் பாராளுமன்ற  தேர்தலில் கூடுதலாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களை அரசு செலவிலேயே வாக்குசாவடிக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லவும், அதற்கு அரசு பணியாளர்கள் உடன் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  மாற்றுத் திறனாளி வாக்காளர்களை அடையாளம் காண வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் விபரங்கள் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டிருக்கும்.
முன்னதாக மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வசிக்கின்ற பகுதி கண்டறியப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்படும். இவர்களை ஆம்புலன்சில் சம்பந்தப்பட்ட வாக்குசாவடிக்கு அழைத்து செல்லும் பணிக்கான செலவை மாவட்ட நிர்வாகம்  ஏற்றுக்கொள்ளும். காவல்துறை மற்றும் சமூக நலத்துறை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த தேர்தல்களில் ஒரு சில தொகுதிகளில் பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த  நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்ததுடன் தேர்தலில் வாக்குபதிவு சதவீதம் அதிகரிக்கவும் காரணமாக அமைந்தது. 
இது தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் புதிய நடைமுறை வரும் தேர்தலில் அனைத்து  தொகுதி களிலும் செயல்பாட்டிற்கு வர உள்ளது. வாக்குசாவடி அலுவலர்களுக்கு வழங்கப் படுகின்ற வாகனங்களும் மாற்றுத்திறனாளிகளை வாக்குசாவடிக்கு அழைத்துவர பயன்படுத்தப்படும் என்று அரசு துறை வட்டாரங்கள்  தெரிவித்தன.

Label