OUR CLIENTS
ஜூடோ போட்டியில் தங்கம் தொகுப்பு வீடு கட்ட சிரமம்!
ஜூடோ போட்டியில் தங்கம் தொகுப்பு வீடு கட்ட சிரமம்! Posted on 28-Jan-2019 ஜூடோ போட்டியில் தங்கம்  தொகுப்பு வீடு கட்ட சிரமம்!

பூவிருந்தவல்லி, ஜன.28-

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் அடுத்த வெள்ளிவாயல் சாவடி ஊராட்சி அடங்கிய எக்கல் காலனியில் வசித்து வருகிறார். இவர் பெயர் மகேஸ்வரி.

உத்தரப்பிரதேசத்தில் தற்போது நடைபெற்ற தேசிய மாற்றுத்திரனாளிகளுக்கான ஜுடோ போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூடோ விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தங்கக்கோப்பையும் சிறந்த வீராங்கனைக்கான பட்டமும் பெற்றார். இவர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர். இவரது தந்தை முருகன். தாய் சாமந்தி. தங்கை ராஜேஸ்வரி. அனைவரும்  கண்பார்வையற்றவர்கள். 
தந்தை முருகன் சென்னை மின்சார ரயிலில் சிறுவியபாரம் செய்து அந்த வருமானத்தில். தன் குடும்பத்தை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொள்ள திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சுந்தரவல்லி நிதியுதவி வழங்கினார். மேலும் தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டி இந்த குடும்பத்தினர் மனு அளித்தனர். இதனை  ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர். தொகுப்பு வீடு வழங்க உத்தரவிட்டார். தற்போது தொகுப்பு வீடு கட்டிக்கொள்ள அரசாணை வழங்கபட்டுள்ளது. 
முன்பணம் வைத்து வீடு கட்டமுடியாததால் மாவட்ட அலுவலகத்தில் தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டி மனு அளித்துள்ளனர். கடந்த ஆறு மாதத்துக்கு முன் கழிவறை  கட்டும் பணி  நடைபெற்றது. கழிவறை தொட்டி அமைக்காமல் சென்றனர். ஒன்றிய அலுவலகத்தை பலமுறை அணுகியும் இதுவரை எந்த பயனும் இல்லை என்று தெரியவந்துள்ளது. விளையாட்டு வீராங்கனைக்கே இந்தபாடு என்றால். விவரம் அறியாத பாமர அப்பாவி மக்களுக்கு நிலைமை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Label