OUR CLIENTS
ஸ்டாலின் இன்று தருமபுரி வருகை:ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்கிறார்
ஸ்டாலின் இன்று தருமபுரி வருகை:ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்கிறார் Posted on 29-Jan-2019 ஸ்டாலின் இன்று தருமபுரி வருகை:ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்கிறார்

தருமபுரி, ஜன.29-

ஊராட்சி சபைக் கூட்டம் உள்ளிட்ட  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

இதுகுறித்து, தி.மு.க. மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.ஏல்.ஏ. திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:   தருமபுரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை தி.மு.க. தலைவர், தமிழக சட்டப் பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார்.
கிருஷ்ணகிரியிலிருந்து காரிமங்கலம் வழியாக வந்து மொரப்பூர் அருகே செட்ரப்பட்டி கிராமத்தில் காலை 9 மணிக்கு நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு சின்னாங்குப்பத்தில் நடைபெறும் அரூர் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
மாலை 3.30 மணிக்கு  தருமபுரி அருகேயுள்ள மூக்கனூரில் ஊராட்சி சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதேபோல மாலை 5 மணிக்கு ஒடசல்பட்டி கூட்டுச்சாலை பகுதியில் நடைபெறும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார். இக் கூட்டத்தை தொடர்ந்து அவர் சேலம் புறப்பட்டு செல்கிறார் என்றார்.

Label