OUR CLIENTS
சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது: சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி
சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது: சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி Posted on 29-Jan-2019 சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது: சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி

சென்னை, ஜன.29-

சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி தெரிவித்துள்ளார். 

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மாநில அளவில் ஜன. 22-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதையடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத்  திரும்பும் ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குள் பணியில் சேர வேண்டும் எனவும், அவ்வாறு திரும்பாவிடில், ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அரசின் எச்சரிக்கையையும் மீறி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 8ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இருப்பினும், பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்புகின்றனர். இதுகுறித்து சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
தமிழகத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95% பேர் பணிக்கு திரும்பினர். சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 4 ஆசிரியர்கள்தான் பணிக்கு வரவில்லை, 99.9% பேர் பணிக்கு வந்துவிட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Label