OUR CLIENTS
1330 குறட்பாக்களை மனனம் செய்து ஒப்பிக்கும் திறனுடையோர் வரவேற்பு!
1330 குறட்பாக்களை மனனம் செய்து ஒப்பிக்கும் திறனுடையோர் வரவேற்பு! Posted on 29-Jan-2019 1330 குறட்பாக்களை மனனம் செய்து  ஒப்பிக்கும் திறனுடையோர் வரவேற்பு!

விழுப்புரம், ஜன.29-

விழுப்புரம் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களை மனனம் செய்து ஒப்பிக்கும் திறனுடைய மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம்வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு  நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் "திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம்" நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் 1330 குறட்பாக் களையும் ஒப்பிக்கும் மாணவ,  மாணவியருக்கு தலா ரூ.10,000, (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசாகத் தமிழ்வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப் பட்டு வருகின்றது.
இதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களை மனனம் செய்து ஒப்பிக்கும் திறனுடைய மாணவ, மாணவியர் இருப்பின் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் எனும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக் கலாம் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இவ்வாறு விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Label