OUR CLIENTS
மாரத்தான் போட்டி 3 ஆயிரம் பேர் பங்கேற்பு!
மாரத்தான் போட்டி 3 ஆயிரம் பேர் பங்கேற்பு! Posted on 29-Jan-2019 மாரத்தான் போட்டி 3 ஆயிரம் பேர் பங்கேற்பு!

திருநெல்வேலி, ஜன.29-

திருநெல்வேலி ரன்னர்ஸ் டிரஸ்ட் சார்பில் 3வது ஆண்டு மாரத்தான் போட்டி  நடந்தது. 

இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். திருநெல்வேலி ரன்னர்ஸ் டிரஸ்ட் சார்பில் பிரமாண்ட மாரத்தான் போட்டி இன்று காலை நடந்தது. இம்மாரத்தான் போட்டியானது 21 கிமீ, 10, கிமீ, 5 கிமீ என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 21 கிமீ மாரத்தான் போட்டியை எஸ்பி அருண்சக்திகுமார் துவக்கி வைத்தார். 
10 கிமீ தூரம் போட்டியை சப் கலெக்டர் மணீஷ் நாரணவரே தொடங்கி வைத்தார். 5 கிமீ தூர போட்டியை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கி வைத்தார். மாரத்தான் ஓட்ட போட்டியானது முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் மைதானத்தை வந்தடைந்தது. இப்போட்டி களில் 3 ஆயிரத்துக்கும் அதிக மானவர்கள் கலந்து கொண்டனர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழ், பதக்கங் களும் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Label