OUR CLIENTS
தட்டில் தண்ணீரை அள்ளி தெளிக்கும் அவலம்!
தட்டில் தண்ணீரை அள்ளி தெளிக்கும் அவலம்! Posted on 29-Jan-2019 தட்டில் தண்ணீரை அள்ளி தெளிக்கும் அவலம்!

புதுக்கோட்டை, ஜன.29-

புதுக்கோட்டை மாவட்டத்தில், கோடை காலம் தொடங்கும் முன்பே நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதால் விவசாயிகள் எவர்சில்வர் தட்டில் வயலுக்கு நீர் தெளித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாக இருந்தாலும் 13 தாலுகாக்களில் நான்கு தாலுகாக்கள் மட்டுமே காவிரி நீரை நம்பி விவசாயம் செய்கிறது. மீதமுள்ள தாலுகாக்களில் நிலத்தடி நீர் மற்றும் மழை நீரை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. சில ஆண்டுகளாக மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாக நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் நெல், கடலை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீர் இல்லாமல் கருகி வருகின்றன. 
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் கடலை விவசாயம் செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் நிலத்தடி நீர் 700 அடிக்கும் கீழே சென்று விட்டதால் மின் மோட்டார் மூலமாக சரியாக தண்ணீர் இறைக்க முடிவதில்லை. எனவே கொஞ்சமாக வரும் நீரை வைத்து விவசாயிகள் சிக்கனமாக வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதனால் சாப்பிடும்எவர்சில்வர் தட்டில் தண்ணீரை அள்ளி நிலக்கடலை வயலுக்கு தெளித்து வருகின்றனர்.

Label