OUR CLIENTS
சோளமாவு பைகளுக்கு மக்களிடையே வரவேற்பு பிளாஸ்டிக் தடையால் விற்பனை ஜோர்!
சோளமாவு பைகளுக்கு மக்களிடையே வரவேற்பு பிளாஸ்டிக் தடையால் விற்பனை ஜோர்! Posted on 29-Jan-2019 சோளமாவு பைகளுக்கு மக்களிடையே வரவேற்பு பிளாஸ்டிக் தடையால் விற்பனை ஜோர்!

கள்ளக்குறிச்சி, ஜன.29-

பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் சோளமாவினால் தயாரிக்கப்பட்டு வரும் மக்கும் தன்மை கொண்ட பைகளின் வரவு, பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்ததையொட்டி பொருட்களை எடுத்து செல்வதில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்து சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடாக, பல்வேறு தரம் கொண்ட சாக்கு பைகள், துணி பைகள், பேப்பர் பைகள் ஆகியன பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் அவைகள் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லாததாலும், அதிக விலை காரணமாகவும் வணிகர்களுக்கு மிகுந்து சிரமத்தை ஏற்படுத்தி வந்தன. தற்போது "ஐ எம் நாட் பிளாஸ்டிக்" என்ற பெயருடன் சோளமாவினால் தயாரிக்கப்பட்ட 100 சதவீதம் மக்கும் திறன் கொண்ட பிளாஸ்டிக் பைகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. 
25 மற்றும் 50 பைகள் கொண்ட பாக்கிங்கில் வரும் இந்த பைகள் அளவிற்கு ஏற்ற விலையில் குறைந்தது இரண்டு ரூபாய் என்ற விலையில் விற்கப்பட்டு வருகின்றன.சோள மாவு மூலம் தயாரிக்கப்படும் இந்த பைகள் பிளாஸ்டிக் பைகளை ஒத்த வகையில் இருந்தாலும், அதில் நான் பிளாஸ்டிக் இல்லை என்ற பெயருடன் சந்தையில் கிடைத்து வருகிறது. சோள மாவு மூலம் தயார் செய்யப்பட்டு, 100 சதவீத மக்கும் தன்மை கொண்டதான இந்த பைகள் ஒன்றரை கிலோ அளவிற்கு தாங்கும் சக்தி கொண்டதாக பல சைஸ்களிலும் கிடைத்து வருவது அனைவரிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறுது.இந்த பைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது. சிப்பெட் எனும் மத்திய பிளாஸ்டிக் நிறுவனம் மூலம் சோதிக்கப்பட்டது. ஐ.எஸ்.ஓ., தரச்சான்றுடன் 100 சதவீதம் மக்கும் திறன் கொண்டது. 
100 சதவீதம் உரமாக்குதலுக்கு உகந்தது எனவும் குறிப்பிட்டுள்ள இந்த பைகளை சேலம் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தமிழக அரசு தடை விதித்த நிலையில் சோளமாவினால் தயாரிக்கப்பட்ட இந்த பைகள் காய்கறி, மளிகை, பேக்கரி உள்ளிட்ட வணிக நிறுவனத்தினருக்கு மக்கும் திறன் கொண்ட சோளமாவு பைகளின் வரவு, மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.கள்ளக்குறிச்சி மார்க்கெட்டுகளில் இந்த சோளமாவு பை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

Label