OUR CLIENTS
சென்னைக்கு மதுபாட்டில் கடத்தல் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கைது!
சென்னைக்கு மதுபாட்டில் கடத்தல் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கைது! Posted on 29-Jan-2019 சென்னைக்கு மதுபாட்டில் கடத்தல் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கைது!

கோட்டகுப்பம், ஜன.29-

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்சில் மது பாட்டில் கடத்திச் சென்ற டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் நேற்றுமுன்தினம் அதிகாலை 3:00 மணியளவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில், போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த (டிஎன்-21-என்&1938 ) தமிழக அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். 
பஸ்சின் பின்புற இருக்கை அடியில் 6 டிராவல் பேக்குகளில் 198  ஹபுல் சைஸ் பிராந்தி பாட்டில்களை கடத்திச் செல்வதை கண்டுபிடித்தனர். விசாரணையில் அரசு பஸ் டிரைவர், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை சேர்ந்த வெங்கடேசன், கண்டக்டர் பாலாஜி(40) ஆகிய இருவரும் சென்னையில் உறவினர்கள் மூலம் விற்பதற்காக புதுச்சேரியில் பிராந்தி பாட்டில்களை வாங்கிச் செல்வதை ஒப்புக் கொண்டனர். 
அதையடுத்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிந்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை கைது செய்தனர். அவர்கள் கடத்தி வந்த 198 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று கடந்த 15ம் தேதி அரசு பஸ்சில் மதுபானம் கடத்திய டிரைவர், கண்டக்டர் கைதானது குறிப்பிடத்தக்கது.

Label