OUR CLIENTS
பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் பெரு நிறுவனங்களின் பொருள்கள் தடை விதிக்கப்படுமா?
பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் பெரு நிறுவனங்களின் பொருள்கள் தடை விதிக்கப்படுமா? Posted on 30-Jan-2019 பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் பெரு நிறுவனங்களின் பொருள்கள் தடை விதிக்கப்படுமா?

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட பெரு நிறுவனங்களின் நொறுக்குத்தீனிகள், உணவுப் பொருள்கள் சரம்சரமாக தொங்கவிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் பைகள், பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ள தமிழக அரசு, பெரு நிறுவனங்களும் அவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகத்தில் மாநில அரசு சார்பில், கடந்த ஜனவரி 1}ஆம் தேதி முதல் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பைகள், பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், போளூரை அடுத்த சந்தவாசல், கேளூர், துரிஞ்சிகுப்பம், படவேடு ஊராட்சிகள் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் 
பெரு நிறுவனங்களின் சாம்பார், ரசப் பொடிகள், இட்லி பொடி மற்றும் மாமிசம் சமைக்கத் தேவையான பொடிகள், நொறுக்குத்தீனிகள் பல வண்ணங்களினாலான பிளாஸ்டிக் பைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் பார்த்து வாங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக, கடையின் முன் பகுதியில் உரிமையாளர்கள் சரம்சரமாகத் தொங்கவிட்டுள்ளனர். இதனால், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் தவறில்லை என்ற எண்ணம் மேலோங்குகிறது. 
எனவே, பெரு நிறுவனங்கள் நொறுக்குத்தீனிகள், உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில், செங்கம் நகரில் உள்ள கடைகளில் நடைபெறும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், போதை பாக்குகள் விற்பனை, செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலம் நடைபெறும் லாட்டரி சீட்டு விற்பனையைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Label