OUR CLIENTS
7 பேரின் விடுதலையை வலியுறுத்தி வாகனப் பேரணி: 3 வாரங்களுக்குள் பரிசீலிக்க டிஜிபி-க்கு உத்தரவு
7 பேரின் விடுதலையை வலியுறுத்தி வாகனப் பேரணி: 3 வாரங்களுக்குள் பரிசீலிக்க டிஜிபி-க்கு உத்தரவு Posted on 01-Feb-2019 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி வாகனப் பேரணி: 3 வாரங்களுக்குள் பரிசீலிக்க டிஜிபி-க்கு உத்தரவு

மதுரை, பிப்.01-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி இரு சக்கர வாகனப் பேரணி நடத்த அனுமதி கோரும் மனுவை 3 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய  உத்தரவிடுமாறு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை இருசக்கர வாகனங்களில் பிப்ரவரி 20 முதல் 28 வரை  பேரணியாக செல்வதற்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு கொடுத்தோம். இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. மேற்கண்ட 7 பேரையும் விடுதலை செய்வது என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
எனவே 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி பேரணி செல்ல அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக டிஜிபியிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை டிஜிபி மூன்று வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Label