OUR CLIENTS
சென்னை மக்களுக்கான அறிவிப்பு: மின்சார ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை மக்களுக்கான அறிவிப்பு: மின்சார ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு Posted on 01-Feb-2019 சென்னை மக்களுக்கான அறிவிப்பு: மின்சார ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை, பிப்.01-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை (பிப்.1, 2) ஆகிய இரு நாட்களுக்கு கீழ்க்கண்ட மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை (பிப்.1, 2) கீழ்க்கண்ட மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆவடி - மூர்மார்க்கெட் காலை 6.40 மணிக்கும், மூர்மார்க்கெட் - ஆவடி இரவு 9.50 மணிக்கும், சூலூர்ப்பேட்டை - மூர்மார்க்கெட் இரவு 7.55 மணிக்கும், மூர்மார்க்கெட் - சூலூர்ப்பேட்டை காலை 7.45 மணிக்கும் புறப்படும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 
சூலூர்ப்பேட்டை - மூர்மார்க்கெட் மதியம் 12, 6.35 மணிக்கும் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Label