OUR CLIENTS
கருத்துக் கணிப்புகள் எல்லாமே கருத்துத் திணிப்புகள்: டிடிவி தினகரன் பேட்டி
கருத்துக் கணிப்புகள் எல்லாமே கருத்துத் திணிப்புகள்: டிடிவி தினகரன் பேட்டி Posted on 01-Feb-2019 கருத்துக் கணிப்புகள் எல்லாமே கருத்துத் திணிப்புகள்: டிடிவி தினகரன் பேட்டி

காஞ்சிபுரம், பிப்.01-

கருத்துக் கணிப்புகள் எல்லாமே கருத்துத் திணிப்புகள் என்றும் மக்களின் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்தார். 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேசுகையில், மக்களவைத் தேர்தல் வரை பொறுத்திருங்கள், அதன் பின் இரண்டு மாதத்திற்குள் பழனிசாமி ஆட்சி முடிவுக்கு வரும். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருந்த வரையில் தான் இரட்டை இலை சின்னம் வெற்றி சின்னமாக இருந்தது. 
வரும் தேர்தலில் திமுக வெற்றிபெறும் என கருத்துக் கணிப்புகள் கூறினால், திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட பயந்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய தினகரன், தேர்தல் தொடர்பாக எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் எல்லாமே கருத்துத் திணிப்புகள். இறுதியில் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருக்கும். கருத்துக் கணிப்புகள் தவறு என்பது அப்போது புரியும் என்றார் தினகரன். 

Label