OUR CLIENTS
கேமரா பதிவை நிறுத்தி விட்டு மணல் கடத்தியது அம்பலம்! போலீஸ் தீவிர விசாரணையில் திடுக் தகவல்!
கேமரா பதிவை நிறுத்தி விட்டு மணல் கடத்தியது அம்பலம்! போலீஸ் தீவிர விசாரணையில் திடுக் தகவல்! Posted on 01-Feb-2019 கேமரா பதிவை நிறுத்தி விட்டு  மணல் கடத்தியது அம்பலம்!  போலீஸ் தீவிர விசாரணையில் திடுக் தகவல்!

பண்ருட்டி, பிப்.1-

பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிப்பாளையம் ஏரிப்பாளையம் செல்லும் சாலையில் அரசு சார்பில் மணல் விற்பனை நிலையம் கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த விற்பனை நிலையத்திற்கு எனதிரிமங்கலம் தென் பெண்ணையாற்றில் இருந்து தினமும் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு இங்கு குவித்து விற்பனை செய்து வந்தனர். மணல் அள்ளுவதற்கும், விற்பனை செய்வதற்கும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை உள்ளிட்ட போராட்டம் நடத்தினர்.
மேலும், மணல் அள்ளும் இடத்திலும், விற்பனை செய்யும் இடத்திலும் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 28ம் தேதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் கோட்லாம்பாக்கம் பகுதியில் புதுப்பேட்டை போலீசார் திடீர் சோதனையின்போது, மணல் இறக்கிய ஒரு லாரியை சோதனை செய்ததில் மணல் விற்பனை நிலையத்தில் இருந்து மணல் கடத்தியதை டிரைவர் ஒப்புக்கொண்டார். 
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த சில வாரங்களாக கேமரா பதிவை நிறுத்திவிட்டு தினமும் லாரிகள் மூலம் மணல் கடத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில் எஸ்.பி., தனிப்படை போலீசார் அரசு மணல் குவாரி விற்பனை மையங்களில் விசாரணை நடத்தினர். விற்பனை நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா, போலீசார் சார்பில் வைத்த கேமரா பதிவு, அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக்கில் உள்ள கேமரா பதிவை போலீசார் ஆய்வு செய்தனர். 
இதில் கடந்த 28ம் தேதி மணல் குவாரியில் இருந்து 100 லாரிகள் வெளியே சென்றது தெரிய வந்துள்ளது. அதில் குறைந்த அளவிலான லாரிகளுக்கு மட்டுமே பொதுப்பணித்துறை சார்பில் பர்மிட் வழங்கியதும் தெரியவந்தது. மணல் குவாரி மற்றும் விற்பனை நிலையத்தில் முறைகேடு ஏதும் நடைபெறாது என கூறிவந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த மணல் குவாரிக்கு அனைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் எரிச்சலடைந்த எஸ்.பி., சரவணன் கண்காணிப்பு கேமரா பதிவை நிறுத்தி விட்டு மணல் கொள்ளை நடந்திருப்பதை உறுதிபடுத்தி கொண்டார். 
இதைத்தொடர்ந்து எஸ்.பி., சரவணன் கோபமடைந்து, மணல் கொள்ளையில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என புதுப்பேட்டை போலீசாருக்கு திறந்தவெளி மைக்கில் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், இந்த பிரச்சனையில் அதிகாரிகள் மற்றும் அரசியல் புள்ளிகளும் சிக்குவார்கள் என தெரிகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி உத்தரவால் பல மணல் மாஃபியாக்களுக்கு உள்ளுக்குள் காய்ச்சல் அடிக்க ஆரம்பித்துள்ளது. 
இதுபோன்ற நேர்மையான அதிகாரிகள் இருப்பதால்தான் இன்றும் தர்மம் நிலைநாட்டப்படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கு. மணல் மாஃபியாக்களை கூண்டோடு கைது செய்யும் பணியில் புதுப்பேட்டை போலீசார் புதிய திட்டம் வகுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. யார் யார் இந்த வலையில் சிக்குவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label