OUR CLIENTS
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டத்தை செயல்படுத்த சூயஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டத்தை செயல்படுத்த சூயஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். Posted on 02-Feb-2019 கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டத்தை செயல்படுத்த சூயஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர், பிப்.02-

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டத்தை செயல்படுத்த சூயஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.  

கோவையில் தன்னார்வ சேவை அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் டிராபிக் ராமசாமி பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:   தமிழகத்தில் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த குடிநீர் வடிகால் வாரியம் உள்ளது.
ஆனால், இந்தத் துறையை செயலிழக்கச் செய்யும் வகையில் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாள்களும் குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை  செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்துடன் 26 ஆண்டுகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.  
இதற்கு முன்பு ரூ. 595 கோடி மதிப்பீட்டில் துவக்கப்பட்ட இத்திட்டம், தற்போது ரூ. 2,900 கோடி மதிப்பீடாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக தனிப்பட்ட முறையில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் பதிலளிக்க மறுத்துவிட்டது. ஆகவே, இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளேன் என்றார்.

Label