OUR CLIENTS
மக்களவைத் தேர்தல்: பிப்.10-இல் பிரதமர் மோடி கர்நாடகத்தில் பிரசாரம்
மக்களவைத் தேர்தல்: பிப்.10-இல் பிரதமர் மோடி கர்நாடகத்தில் பிரசாரம் Posted on 02-Feb-2019 மக்களவைத் தேர்தல்: பிப்.10-இல் பிரதமர் மோடி கர்நாடகத்தில் பிரசாரம்

பெங்களூரு, பிப்.02-

பிரதமர் நரேந்திரமோடி, கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை வருகிற பிப்.10-ஆம் தேதி தொடங்குகிறார்.

மக்களவைத் தேர்தலுக்காக கர்நாடகத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் விவாதித்த பிறகு, அதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா கூறியது: கர்நாடகத்தில் பிப்.10-ஆம் தேதி ஹுப்பள்ளியில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்குகிறார்.  அதன்பிறகு, பிப்.19-ஆம் தேதியும் பிரதமர் மோடி கர்நாடகத்துக்கு வருகிறார்.
ஆனால், எந்த இடத்தில் பேசுகிறார் என்பதை இன்னும் முடிவுசெய்யவில்லை. பிப்ரவரி கடைசி வாரத்தில் மீண்டும் ஒருமுறை கர்நாடகத்துக்கு பிரதமர் மோடி வரவேண்டும் என்று விரும்புகிறோம்.  பிப்.14, 21 ஆகிய தேதிகளில் கர்நாடகத்துக்கு வரும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கண்காணிப்பதோடு, பிரசார வியூகங்களை வகுத்தளிக்கிறார். பிப்.26-ஆம் தேதி முதல் எனது வாக்குச்சாவடி பலமானது என்ற பிரசார திட்டத்தை பாஜக தொடங்கவிருக்கிறது.
இந்த பிரசாரத்தின் போது வாக்குச்சாவடி அளவிலான பொறுப்பாளர்கள், வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பேசி பிரதமர் மோடியின் சாதனைகளை எடுத்துரைக்கிறார்கள். மார்ச் மாதத்தில் வட்ட அளவில் மோட்டார் சைக்கிள் பேரணிகளை பாஜக நடத்தும். அப்போது, மத்திய பாஜக அரசின் சாதனைகள் வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கப்படும் என்றார்.  

Label