OUR CLIENTS
பிப். 5இல் திமுக ஊராட்சி சபை கூட்டம்: நடிகர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
பிப். 5இல் திமுக ஊராட்சி சபை கூட்டம்: நடிகர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு Posted on 02-Feb-2019 பிப். 5இல் திமுக ஊராட்சி சபை கூட்டம்: நடிகர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

தூத்துக்குடி, பிப்.02-

தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை (பிப். 5) நடைபெறும் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

இதுகுறித்து திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி "மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம்' எனும் முழக்கத்தை முன்வைத்து அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி ஒன்றியம், முடிவைத்தானேந்தல் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை (பிப். 5) காலை 10 மணிக்கு நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஊர் மக்களிடம் கருத்துகளை கேட்டறிகிறார். இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள்அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label