OUR CLIENTS
சிபிஐ இயக்குனரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவு உச்சநீதிமன்றம் அதிரடி
சிபிஐ இயக்குனரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவு உச்சநீதிமன்றம் அதிரடி Posted on 02-Feb-2019 சிபிஐ இயக்குனரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவு உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடில்லி, பிப்.2-

மத்திய அரசு உடன டியாக சிபிஐக்கு புதிய இயக் குனரை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சிபிஐ முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு அதிகாரப் போட்டி வலுத்தது. அதன் காரணமாக திடீரென்று இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில் கடந்த டிசம்பர் மாதம் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் வழிக்காட்டுதலின் படி அமைக்கப்பட்ட உயர்மட்ட கமிட்டியில் அலோக் வர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கவும் அவரை தீயணைப்பு துறைக்கு இடமாற்றவும் முடிவெடுக்கப்பட்டது.
இதை ஏற்காத அலோக் வர்மா தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக நாகேஷ்வர ராவ் இடைக்கால இயக்குனராக பொறுப்பேற்றார். இந்நிலையில் சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து  'காமன் காஸ்' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் அருண் மிஷ்ரா மற்றும் நவின் சின்ஹா முன்னிலையில் நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சிபிஐ இயக்குனர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி. அதில் இடைக்கால இயக்குனராக ஒருவர் நீண்ட காலம் பொறுப்பில் இருப்பது சரியல்ல. இதுவரை சிபிஐ இயக்குனர் பதவிக்கு மத்திய அரசு யாரையும் நியமிக்காதது ஏன் ? என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் கே.கே. வேணுகோபால் சிபிஐ இயக்குனரை தேர்ந்தெடுக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வு கமிட்டி கூட்டம் இன்று நடைபெறும் என்று தெரிவித்தார்.
மேலும் கடந்த மாதம் நடந்த தேர்வு கமிட்டி கூட்டத்தில் நடந்த விவாதங்களின் விவரத்தை சீலிடப்பட்ட கவரில் நீதிபதிகளிடம் வேணுகோபால் சமர்பித்தார்.
இறுதியில் சிபிஐக்கு இடைக்கால இயக்குனர் இனி தேவையில்லை.  உடனடியாக சிபிஐக்கு புதிய இயக்குனர் நியமிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் புதிதாதாக நியமிக்கப்படும் சிபிஐ இயக்குனர் நாகேஷ்வர ராவ் எடுத்த முடிவுகளையும் அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குனராக பொறுப்பேற்ற பின் இரண்டு நாட்களில் எடுத்த முடிவுகளையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Label